Wednesday, December 22, 2010

வைகையில் வெள்ளம் !!!



மகன் அவன் மறுபுறம்
புறண்டு,
மனம் தனை கொள்ளையும்
கொண்டு ,
ரஹ்மான் இசையையும்
புறந்தள்ளி,
அழகிய அவன் நாவால்
பழகிய வார்த்தைகளை
இளகிய வார்ப்பாய்
இசைக்கையில் ,
இயல்பாய் பிரண்டோடும்
வாநீர் துளிகள் தான்
வைகையில் இன்று
வெள்ளமா ?

Monday, December 20, 2010

தமிழகம் தருசாய் போகட்டும் !!!

ஒரு ரூபாய்க்கு அரிசி ஆனால்
சிறுநீர் கழிக்க மூன்று ரூபாய் !!!
ஏ சி மாலில் இலவசம் ..
நாற்றம் பிய்க்கும் ஓட்டை
சுவற்றுக்கு மூன்று ஓவாய்!!!

உணவகம் நில்லா பேருந்துகள்
கூட உதயசூரியன் உணவகத்தில்
ஓய்வெடுக்காமல் செல்வதில்லை ..
மதுரை ஆரப்பாளையம் பேருந்து
நிலையத்திலும் இதே அடாவடி தான் ..
தமிழகம் தருசாய் போகட்டும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ..!!!

Wednesday, December 15, 2010

குட்டி தோழன் !!!

பிறந்த நாள் முதல்
பிறண்டு உருள
பிடிவாதம் பிடித்த நீ
உன்னால் எதுவும்
முடியுமென தவழ்ந்தே
கண்பித்து விட்டாயே
கவின் செல்லமே !!!
உன் முயற்சியும்
வெற்றியும் தொடரட்டும்
என் குட்டி தோழா !!!

Wednesday, October 13, 2010

காதல் அழியாது !!!

தன்னிலை மறந்து
உன்னிலே மறைந்து
ஊர் உறங்கும் உற்சவத்தில்
தார் சரியும் சாலை ஓரத்தில்
மணலிலே மங்கையுடன்
கால்கள் நான்கும் நம்
தோள்கள் உரச நடக்க
கைகளின் விரல்கள்
இறுக்கமாய் இணைந்து
இளம் காதல் அது
உயிர் பெற்றது அன்று !!!

அதே வேளையில்
அதே பாதையில்
அன்பே உன்னை பிரிந்து
ஒற்றையாலனாய் உயிரற்ற
உடலோடு உணர்வற்ற
ஊனோடு நடக்கையிலும்
உணர்ந்தேன்
நம் உயிருள்ள காதலை !!!

Wednesday, October 6, 2010

எனை உணர்வாயா ????

எனை உணர்வாயா ????
நாட்கள் பல
நானாகவே நன் இல்லை !!!
துக்கங்கள் பல நேரம்
தூக்கங்கள் சில நேரம் !!!
உணவுகள் சில நேரம்
உன்நினைவுகள் பல நேரம் !!!
பிடித்தம் அளவு
பிடிபடவில்லை !!!
உன்னை பிடித்த அளவு
வேறதும் பிடிக்கவும் இல்லை !!!
கோபங்கள் எல்லை தாண்ட
பாசங்கள் என்னுள் தூங்க
வேறெங்கே நம் வாழ்வை தேட !!!

Wednesday, August 4, 2010

தங்கை !!!


திமிராய் திரிந்த
கட்டிளம் காளையை
கடிவாளமிட கடவுள்
அனுப்பிய உன்னத
உறவு நீ கனி !!!

ஆம்!!! கனிமொழி
என் தங்கையின்
அருமை பெயர்
இது தான் !!!

முழங்கால் தேய
மூக்கு ஒழுக
நாக்கு நவிழ
நடை பயின்ற
அந்த நாள் முதல்
நீ அண்ணா என்று
அழைத்தது யாருக்கும்
கேட்டிடாத சொல் அது !!!

ஆம் !!! மூன்று வயது
பெரியவன் ஆனாலும்
டேய் என்று நீ
அழைக்கும் போது தான்
பாசம் அது
நெஞ்சை முட்டும் !!!

திண்ணையில் நீ
தினம் தினம் தவழையில்
குவளையில் நீர் கொண்டு
குளம் கட்டி நாம் குளித்தது
கதையல்ல நிஜம் !!!!

பனை ஓலையில்
கத்தாளாம் முள் குற்றி
வண்ணத்து பூச்சியிடம்
வண்ணம் சில பூசி
அடிக்கும் காற்றுடன்
ஆர்பாட்டம் செய்த
அழகான நாட்கள் எங்கே !!!
பத்தாவது படிக்கும் போதும்
பரிட்சைக்கு நேரமானால்
பதறி அழும் உன் முகம்
பருவமழை பொய்தபின்
தூறல்களை தாங்கி நிற்கும்
தாமரை இதழ்கள் !!!

பொது தேர்வா அது ???
போனால் போகட்டும் என்றால்
மறுபடியும் முகம் கோணும்
மணமேடை மகள் போல !!!!

மாமனுக்கு மனம் இசைந்து
தாய் பிறந்த வீட்டிலே
நீ தாயாக போகையிலே
பச்சிளம் குழந்தை நீ !!!

சித்தி குழந்தை முதல்
உன் தங்கை குழந்தை வரை
ஒய்யாரமாய் செய்யும்
உனது ஒப்பனைகள்
ஓவியனின் கைகளுக்கே
வெட்ககேடு !!!!

விடுதியிலே விடுபட்ட
தாய் பாசம் அது!!!
ஆறு மாதத்தில்
அழகான கேரளத்தில்
அன்னையவே மறக்கவைத்த
மாற்று தாயம்மா நீ !!!

இருபது வயதிலே
இரு மடங்கு பண்பட்டவள் நீ !!!!
நாற்பது வயதிலே
நாடாள போபவள் நீ !!!
திருமணம் ஆனாலும்
தினம் நீ குழந்தை தான் !!
உன் அகவை ஆறு தான் !!!

கொஞ்சும் மழலை
உன்னில் தஞ்சம் ஆகி
விண்ணை விஞ்சி
உன் வாழ்வு சிறக்க
வாழ்த்தும் அன்பு
அண்ணன்
முரசொலி



Tuesday, August 3, 2010

தாரகையே தாரம் ஆனாய் !!!!

பாதையிலே நீ போகையிலே
பாதியிலே போகுதடி
பாவை உன் பின்னாலே
பாவி உயிர் தன்னாலே ...

ஆவணி திருவிழாவில்
தாவணி நீ அணிந்தாலே
தாவுமடி கண்ணு ரெண்டும்
அழகர் மலை குரங்குபோலே !!!

மதுரை மல்லிகையே
மாமன் கிட்ட சொல்லலேயே..
தங்க தாமரையே நீ
தண்ணி எடுக்க
போகையிலே ...

கோபுர வாசலிலே
போகுற குமரி எல்லாம்
மனதொரமாய் செல்ல
மனதாழமாய் நீ சென்று
மனைவியான மாயமென்ன ..

கள்ளி காட்டுக்குள்
காற்றாட போனவனை
கள்ளி நீ களவாடி
முந்தியிலே முகம்
மறைத்து மூச்சுவாங்க
செய்ததென்ன ????

மஞ்சளிலே நூல்தொடுத்து
நெஞ்சத்திலே தஞ்சமாகி
தஞ்சை கோபுரமாய்
தாரகையே தாரம் ஆனாய் !!!

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!

தினம் தினம்
திசுவாய் பிணைந்து
சுற்றி திரிந்த
சுகமான பொழுதுகள்!!!

என் கஷ்டங்களை உன்
இஷ்டமாய் இசைந்து
நண்பா நாம் பகிர்ந்த
அன்பு ,ஆசை
இருப்பு ,ஈதல்
உணவு ,உறைவிடம்
உடைகள் ,ஊர்திகள்
ஏக்கங்கள் ,ஏமாற்றங்கள்
அம்பதுகள், ஆயிரங்கள்
ஓராயிரம் யுகங்களுக்கும்
அழியாத காவியமே என்
நினவு ஓலையிலே !!!!

தொலைவிலே நீ இருக்க
அருகிலே அலைபேசியும் இருக்க
இ-மெயிலிலே இரண்டு நிமிட
பேச்சு தான் இன்றைய
விஞ்ஞான ,விசித்திரமான
உலகம் நமக்கு அளித்த
பரிசு !!!!

கலங்கிய பொழுதுகளில்
தெளிந்த நீரோடையாய்!!!
சிரிக்கும் சிறு பொழுதில்
சீர்படுத்தும் சிற்பியாய்,
என் வாழ்வில் வழிகாட்டியாய்
வாழும் என் அன்பு
நண்பர்களுக்கு என் இனிய
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!

தேடல் வாழ்வில்
தேடுவன கிடைத்து
தொடுவானை நீ தொட்டு
நண்பனே,
உன் வளர்ச்சியால்
நம் இந்தியா வல்லரசாக
வழிதொடுப்போம் !!!

நட்புடன்
முரசொலி

Thursday, July 29, 2010

சித்திர விளையாட்டு ....

கொடுக்கும் இறைவனுக்கு
எடுக்கவும் துணுவு....
தன் குருதி திரித்து
நம் மழலை கருதி
வெண்ணிற பாலை
விடியலுக்கு விரைந்து
மடியிலே இறக்கிடும்
ஊணுயிர் பசுவை
பருந்துகளுக்கு இரையாக்கி
பசுவின் சிசுவை
பரந்த தொழுவத்தில்
துணையின்றி செய்தாயே......
கண்ணீரால் கவலை மறக்க
காலம் பல ஆகும் .. ...
சற்று நிறுத்தி வை உன்
சித்திர விளையாட்டை......

வன வாசம்!!!!


மனைவி அவள்
மகனை பெற்றெடுக்க
மாதம் ஒன்பதில் - தான்
மழலையில் தவழ்ந்த
தாய் வீடு சென்று .....
படும் கஷ்டங்களை - என்
பார்வையிலே மறைத்து,
தேடும் இஷ்டங்களை - உன்
தேவைகளை துறந்து,
நுணளின் முனு முனுப்பாய்...
அனலின் கத கதப்பாய் ...
வனளின் வாசம் ராமனுக்கு
எவ்வளவு நரகம் என
எள்ளளவு இடைவெளியில்
என்னவளே உணரவைத்தாய்!!!!

ரோட்டோரம் எனது வீடு !!


இடைவெளியில் எறும்பு
செல்வதே தெய்வச்செயல் ,,,,,
இடைக்கு பின்னால்
இன்னொருவரும் அமரலாம் !!!!
-- ரோட்டோரம் எனது வீடு !!!!

அன்பே .....

கண்ணிலே பிரதிபலித்து,
கனவிலே கலந்துவிட்டு,
உயிரிலே ஊறிவிட்டு,
உணர்விலே உறைந்துவிட்டு ,
கையிலே அகப்பட்டு,
அன்பே என் அகம் தொட்டாய்!!

சில நாட்களில் !!!

விடும் மூச்சிலே
அவளை உணர்ந்து ,
தொடும் விரலிலே
அவளை உதைத்து ,
உண்ணும் உணவிலே
அவளை வதைத்து ,
ஓவியமாய் உருவானவன்,
காவியமாய் கருவானவன்,
புவியாளும் ஓர் அரசன் ,
புன்னகைகள் இன்னும்
சில நாட்களில் !!!

ஆசை!!!

முட்கள் உன்னை
முத்தமிட்டால்
நீ முணுக்கும் பெயராய்
இருக்க ஆசை
அவ்வப்பொழுது !!!

முட்களாகவே மாறி
உன்னை சிலிர்க்க
வைக்க ஆசை
எப்பொழுதும் !!!

தடாலடி ஏற்பாடுகள் !!!!

பூமியிலே பூத்திருக்கும்
நாசியிலே புகுந்திழுக்கும்
விழியிலே விளையாடும்
உலகிலே உயிரோடிருக்கும்
அழகிய மலர்கள் யாவும்
உன் முகவரி அறிந்து
பின் தினசரி நடந்து
தூங்கா நகரத்தை
பூங்கா நகரமாக்கி
வேங்கை உன்னை
விண்ணவர்கள் வியக்க
மன்னவர்கள் மயக்க
நம்மவர்கள் பயக்க
தாங்கி வரவேற்க
தடாலடி ஏற்பாடுகள் !!!!

Friday, July 9, 2010

அழியுதே அழகான இயற்கை !!!

அழியுதே அழகான இயற்கை !!!
மெல்லிய இடையை
மெதுவாய் கில்லி
அழகியே உன்னை
அடியோடு சாய்க்க
போகிறான்!!! பாவி அவன்
மரம் வெட்டுபவன் !!!

Thursday, June 24, 2010

தமிழ் !!!

தமிழ் !!!
கான்வென்ட் காம்பௌன்ட் - ல்
காக்கா தான் தமிழ் வாத்தியார் ,
கோடி ரூபாய் செலவில்
கலைஞர் தலைமையில்
கோலோகல செம்மொழி மாநாடு
வைப்பதற்கு பதிலாக
நூறு காக்கைகளை வாங்கி
வானளாவ விட்டால்
தமிழ் வளரும் அய்யா ??????

Thursday, June 3, 2010

அப்பா !!!

கருவாய் கனிந்த காலத்திலே
கால்களால் உதைத்தபோதும்
அன்னையை கட்டியணைத்து
அழகாக துள்ளுவதாய்
ஆனந்தப்பட்ட அப்பா உனை
அன்றே பார்க்க ஆசை தான் !!!

மகனை பெற்றெடுக்க
அன்னை அவள் அழுதுபுரள
கைகளை பிசைந்தபடி
குறுக்கும் நெடுக்குமாய்
குறைந்தது பத்து மைல்
தூரத்தை கடந்த உனை
கண்களில் கண்டபோது
கண்ணுக்குள் கருவிழியாய்
கால் தடுமாறும் வயதிலும்
காத்திட ஆசை தான் !!!!

தவழும் வயதில்
பூமியிலே பூக்கள் விரித்து
தரையிடம் பகை தீர்த்த
பாசக்கார அப்பா நீ !!!!

நடை பயின்ற போது
கூச்சலிடும் ஷூவை விட
உனது கைதட்டல் உரக்க
கேட்குமப்பா ,ஊரையே கூட்டுமப்பா!!!

பள்ளியிலே விட்டுவிட்டு
பாதியிலே திரும்பிவந்து
படபடக்கும் உனை
உன் அன்னை பார்த்தால்
பாவிப்பாள் அரை வயது
குழந்தையாய் உனை !!!

அடி அடியாய் நான் வளர
அணு அணுவாய் ரசித்து,
தோள் தொட்ட போதும்
தோழனாய் பாவித்த உனை,
தகப்பனாய் பிரமன் அவன்
தாரைவார்க்க என்ன நான்
தவம் செய்தேனோ ???

உன்னிடம் கற்றது
ஒன்றா இரண்டா ???
உயிருள்ளவரை உணர்வுகளை
கட்டுபடுத்த !!! உறவுகளை
அரவணைக்க !!! தவறுகளை
திருத்திக்கொள்ள !!! ஆசைகளை
நிறைவேற்ற !!! நெஞ்சங்களை
நேசிக்க !!! அடுக்குவேன்
அளவில்லாமல் !!!!

மற்றோர் பிறவியில்
எனது பிள்ளையாய்
நீ இருக்க, ஊணுயிறாய்
உனை காக்க இறைவனை
பிரார்த்திக்கும்
உன் அன்பு ...
செல்வம்

Wednesday, March 10, 2010

இளம் கன்று... பயம் அறியாது ....


அனைவருக்கும் வணக்கம் !!!

சிட்டு போல சிறகடித்து சிறு பிள்ளையாக இருந்த காலம் அது... அந்த பள்ளி வாழ்க்கையை என் நினைவு உள்ளவரை மறக்க முடியாது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் எங்கள் பள்ளி மற்றும் விடுதி ஆண்டு விழா மிகவும் கோலாகோலமாக நடப்பது வழக்கம். நிறைய விளையாட்டு போட்டிகள் , கட்டுரை , கவிதை ,மற்றும் நாடக போட்டி என திறமைகளை அரங்கேற்ற எண்ணற்ற வாய்ப்புகள் தந்த வளாகம் எங்கள் டி பிரிட்டோ விடுதி .

நான் ஒன்பதாவது படித்து கொண்டு இருந்த சமயம் அது ... என்னை அப்பொழுது பிளஸ் ஒன் படித்த அண்ணா ஒருவர் ஒரு நாடகம் எழுதி கொண்டுவா என்று சொல்லி செல்ல, எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை , சுமாராக இருக்கும் எனது கவிதைகளை கண்டு இருக்கிறது அந்த ஹாஸ்டல் அதற்கு முன். தெரியாத ஒன்றை கற்றுக்க வைக்கும் பழக்கம் ஒன்றும் புதியது அல்ல எங்கள் ஹாஸ்டல்-கு.அது தான் அதன் பெருமையே .

ஆதலால் நானும் எழுத ஆரம்பித்தேன் ,ஒரு வழியா எழுதுயும் முடித்தேன் 30 பக்கம் கதையை . பின் அதில் நானும் நடித்து எங்கள் அணி முதல் பரிசு பெற்றது ஒரு தனி கதை , கதைக்குள்ளே கதை வைப்பது இயக்குனர் கௌதம் மேனன் கு பரிட்சயம் என்றாலும் எனக்கு அது கற்றுக்க வேண்டிய விஷயம் . அதனால் அதை நாம் மற்றொரு சந்தர்பத்தில் பேசுவோம். நான் இங்க கூற வந்தது வேறொரு விஷயம், ஆம் அன்று 1998 ல் எழுதிய கதைக்கு அப்புறம்,சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எழுதும் அடுத்த கதை இது..

இந்த மிக பெரிய இடைவெளி எதற்கு ? பத்தாம் வகுப்பு முதல், ஒரு வேளையில் சேர்ந்து ,திருமணமும் ஆனா பின்பு தான் திரும்பவும் அந்த ஒன்பதாவது வரை வாழ்ந்த வாழ்க்கையானது எனக்கு கிடைத்திருக்கிறது . இடையில் அனைவருடைய வாழ்வுமே , வேறொரு பாதையில் தன் நாட்டத்தை செலுத்தி,எதோ ஒரு தேடலை நோக்கியே பயணிக்கும் என்பது ஆணித்தனமான உண்மையென என்னால் சொல்ல முடியும். வளரும் வல்லரசு இந்தயாவின் கல்வி முறை ,வளரும் வாரிசுகளை வாட்டியது,வாட்டுவது நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை .

திருமணம் ஆனா பின்பு , தொலைகாட்சியில் தொல்லை கொடுக்கும் மெகா சீரியல்களை ,கண்ணும் மனதும் காதல் செய்ய ஆரம்பித்து விட்டது என்னால் உணர முடிந்தது , மனதை திசை இருப்ப எடுத்த முயற்சி தான் இந்த சிறுகதை , கிடைத்திருக்கும் இந்த நாழிகைகளை வீணடிக்காமல் ,எழுத துடிக்குது என் இதயம் ,என்னுடைய எழுத்துக்கள் எதோ வரு வகையில் நிச்சயம் உங்களை மகிழவைக்கும் என நம்புகிறேன் . இல்லாவிட்டாலும் உங்களுடைய விமர்சனங்களுக்காக ஏங்கும் என்றுமே என்னுடைய எழுத்துக்கள் .

"இளம் கன்று பயம் அறியாது " - தலைப்பே உணர்த்தும் உங்களுக்கு ,இது நம் சிறுவயதில் நம்மை அறியாமலேயே ,விளைவுகளையே உணராமலேயே ,நாம் அரங்கேற்றிய குறும்புகளை இங்கே நான் குறும் கதையாக அசைபோட ஆசைபடுகிறேன் .நிச்சயம் இது உங்களுடைய நினைவுகளையும் பின்னோக்கி கொண்டு சென்று ,நிமிட சந்தோசத்தை தரும் உங்கள் மனதில். எழுதுகிறேன் ...
காத்திருங்கள் !!! நன்றி !!

Tuesday, March 9, 2010

வழி மாறிய குருவி !!!

இரதேட போன
இருபது நாளு
தூக்கணாம் குருவி,
இடையிலே சேர்ந்துகுச்சு
இன்னொரு கூட்டத்துல!!!

தொலஞ்ச பிள்ளைய
அலைஞ்சு தேடிய
அறியாத ஆத்தா குருவி
அடிபட்டே செத்துபோச்சு
அந்த காட்டு கழுகுகிட்ட !!!

அஞ்சு நாளு முன்னே
அண்ணன பிரிஞ்ச
பிஞ்சு குருவி ,
பறக்கவும் முடியல
நடக்கவும் தெரியல
அனாதையா ஆயிப்போச்சு !!!

நாலு நாலு பட்டினியா
நாற்பதடி ஒசரத்துல
தொட்டியில தொங்கியே
துவண்டு போச்சு
அந்த பொட்ட புள்ள !!!

தொணையோட இணைஞ்சு
ஹனிமூன் கு வந்த
அண்ணா குருவி
அல்லாடி போச்சு அந்த
பிணத்த பார்த்து.. ஆமா
செத்து போச்சு சின்ன குருவி !!!

வளர்ந்த குடும்பத்த
வழியிலே விட்டுட்டா
வசதியா வாழ்ந்தாலும்
அசதியா விழும்போது
அனாதையா தான் இருப்ப ???

பிரிவு !!!

தண்ணீரில் தொலைந்த

கண்ணீரை ,

தேடித்தர உன்னால் முடியுமா ?

என்னால் முடியும் ..

குளம் முழுதும் என்

கண்ணீர் தானே ???

இமைகள் !!!

இரு விநாடி
இடைவெளி துடிப்பு தான்
நீ இருப்பதெற்கே
அடையாளம் நண்பா !!!

இமைக்க மறந்தால்
துடிக்கவும் மறப்பேன் ,
உன்னை பிரிந்தால்
மண்ணை சேருவேன் !!!

ஏய் கண்ணே ,
என் தேவதையை
மறைவாய் முத்தமிடத்தான்,
உன்னுள் உள்வாங்கி
என்மோகம் தீர்த்தேன் !!!

ஏய் இமையே ,
பிரதிபலிக்கும் என் கருவிழியில்
உன்னவளை உறங்கவைத்தேன் ,
நீ அவளை கிறங்கடித்தாய்!!!
பரிகாரமாய் ,
உன் இமை கொண்டு
என் இளமை காத்துவிடு!!!

நட்பு!!!

அழுதவுடன் அரவணைக்கும்
அன்னையிடம் ஆரம்பிக்கும்
அந்த அழகிய நட்பு !!!

ஆள் கொஞ்சம் வளர்ந்திடவே
ஆடாத ஆட்டம் ஆட
ஆள்சேர்த்து ஆர்பரிக்கும்
ஆண்களின் நட்பு !!!

இவன் வீட்டு சாப்பாடு
இனம் விட்டு இடம் மாறி
இளம் சிட்டாய் இவ்வுலகையே
இரண்டக்கிடுமே இந்த நட்பு !!!

ஈயாய் ஒற்றிக்கொள்வோம்
ஈருயிராய் வாழ்ந்திடுவோம்
உள்ளதெல்லாம் செலவழிப்போம்
ஊரு ஊராய் சுற்றிடுவோம் !!!

எந்த ஜாதியும் அறியமாட்டோம்
ஏழை ஏக்கமமும் உணரமாட்டோம்
ஐந்து விரலாய் உதவிக்கொள்வோம்
ஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் !!!

ஓரிடத்தில் இல்லா விட்டாலும்
ஓருயிராய் நினைவு கொள்வோம்
ஓளவை வயது வரை ஒற்றுமையாய்
உலகை அளப்போம் !!!!

அன்பே - இது தான் காதலா ????

பேசாமல் நீ பேசும் பேச்சு ..
பார்க்காமல் நீ பார்க்கும் பார்வை ..
சிரிக்காமல் நீ சிரிக்கும் சிரிப்பு ...
எழுதாமல் நீ எழுதும் எழுத்து ...
உலகமே உணராமல் நான் மட்டும்
உணர்கிறேனே ,,,,
அன்பே - இது தான் காதலா ????

மங்கையர் தின வாழ்த்துக்கள் !!!

மங்கை உன் வளர்ச்சி
வேங்கை போல் சீறுவது
எமக்கு மகிழ்ச்சியே !!!
சுமக்கும் குடும்பமும்
சுமையென இகழாதே !
அகவையில் அணுஅளவும்
அகம்பாவம் கொள்ளாதே !!
அடங்கவும் வேண்டாம்
ஆடவும் வேண்டாம்
அன்பால் அடக்கு,
ஆடவன் ஆடவே மாட்டான் !!!
மங்கையர் தின வாழ்த்துக்கள் !!!

கிணற்று படி!!!

தண்ணி என்னை விலகும் வரை
பின்னி என்னை உலாவிய நீயும் ,
பாதியிலே பாசம் மறந்து
வீதியிலே துவசம் செய்யும்
மானிடர் போல தானோ ???
-- கிணற்று படி சொன்னது பாசத்திடம் !!!

ஒரு அழகிய நிலா காலம் !!!

பலவேறு உப்புமாக்கள்
சிலநேர சாப்பாடு ஆகிவிட ,
வெகுநேரம் விட்டத்தையே
விழிகள் நோக்கிவிட,
வாழ்வின் விடைதேடிய நாட்கள்
நெஞ்சில் இன்றும் நிழலாய்!!!
--- அது ஒரு அழகிய நிலா காலம் தான் !!!

மெழுகு !!!

இதமாய் இருக்குமென
இயல்பாய் பற்றிய நான் ,
சிக்கிய பிறகு
அழுதே ஆகிறேன்
ஆயுள் கைதியாய்!!!! ஆம்
தவறுகள் தண்டனைக்குரியவை !!

தேடல் ...

ஆசை அறிதல் தரும் ,
அறிதல் புரிதல் தரும் ,
புரிதல் தேவை தரும் ,
தேவை தேடல் தரும் ,
தேடல் விடியல் தரும் !!!

சாணக்கியன் !!!

குழந்தையாய் அவள் இருக்க,
மழலையாய் அவன் பிறக்க,
அசதியாய் அவள் உறங்க ,
குதுகலமாய் அவன் சிரிக்க ,
போட்டி இங்கே அரங்கேற்றம் !!!
யாரோடு யார் போட்டி போட ??? :)

மனைதனில் குடிகொள்ள
மனைவியின் மடிதனில்
குடிகொண்ட குட்டியவன்
குமட்டலும் நித்திரையும்
நித்தமும் நிகழ்த்தி
சாந்தமாய் பந்தமாகிறான்
சாணக்கியன் அவன் !!! :)

நாளிகைகள் தவறாமல்
நச்சரித்தே ,
நாக்கு ருசியாய் நமக்கும் நீ
அம்மாபோல்
அழகியா ?? இல்லை
என்னைப்போல் பேரழகனா?

கீறல்கள் ...

தலைமுடி கோதி
தலையனையாய் மாறி
தனக்குள்ளே
தஞ்சமாக்கும் அழகிய
நத்தை என் கைகள் !!!

முகத்தின் அச்சுக்கள்
தேகத்தின் பூச்சுக்கள் !!!
கால்களின் நடனங்கள்
இருபால்களின் தடயங்கள் !!

உதடுளின் ஊர்வலத்தில்
உறிஞ்சி இளைப்பாற
தெரிஞ்சே படைத்தானோ
அந்த பிரமன் !!!

சுமைகள் சுகமாகி
இமைகள் ஊமையாகி
இருவழிகள் இடம்மாறி
சிறகிழந்த தேனிக்கு
இறையூட்ட
இருபது நிமிட போராட்டம் !!!

முதல் மாதம் !!

முடிந்ததே
முதல் மாதம் !!
தொடருதே
அவள் மோகம் !!!
வளருமே
ஆயுள் முழுதும் !!!!

சிரிப்பு !!!

பற்களின் அணிவகுப்பு
சொற்களின் துணை எதற்கு ?
புன்னகையே புரியவைக்கும்
பகைவனையே பணியவைக்கும் !!!

தோழியின் தோல்வி கவிதை !!!


இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
என் கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டும் உரிமை உண்டு உன்னை காக்க !!
மலரிடம் சொன்னது முள் !!!

விட்டு விலகும் நெஞ்சங்கள் எல்லாம் விடுதலை விரும்பிகள் என்றால்
விருப்பத்தை மறைத்துத்தான் விதைத்திருக்கலாமே!!!

கண்ணீரில் நீந்த வைத்த
கன்னி உன் கவிதைகளை
கண்டால்
பிரம்மனும் பிரம்மிப்பான் !!!
உன் காதல் கை கூட
புதுபிறவி ஒன்றை
அருள்விப்பான் !!!!
வாழ்த்துக்கள் தோழி !!!

மழைக்காலம் !!!

மேகம் தன் சட்டையை பிழிந்து
மென்மையான இலைகளுக்கு
தண்ணீர் கொடுக்கும்
பருவம் இங்கே ஆரம்பம் !!

காகித கப்பலை
மூழ்கடித்து,
பிரிமியர் செப்பலை
சேறாக்கி,
அழகிய ஓட்டையை
அருவியாக்கி,
ஆட்டம் போட்ட
ஞாபக ஓட்டங்கள் !!!!

தவளையின் குறட்டை
தாயின் தாலாட்டு!!!
குவளை நீர்கொண்டு
குளியல் நாடகம் !!!
கூடுதல் மழையெனில்
வகுப்புகள் மூடப்படும் !!
விடுப்புகள் விடப்படும் !

காலை பனியில்
அருகம் புல்லில்
அவள் பெயர் எழுதி
ஆசை தீர்த்த ஞாபகம்!!!

கிளையை கிள்ளிவிட்டு
நண்பனை குளிப்பாட்டும்
பழிதீர்க்கும் பட்டாளம் !!!

என் மழலையில் வந்த மழை
எதிர் மலையில் ஒழிந்துகொண்டு
ஏனோ வர மறுக்கிறது !!!!







உனை நினைத்து ஓர் கவிதை !!!


தேவதையே உனை காண
தேடுதே இமைகள் !

என்னவளே உனை எண்ணி
எழுதுதே விரல்கள் !

வஞ்சி உனை கொஞ்ச
கெஞ்சுதே கைகள் !

நறுமுகையே உனை நாடி
நடக்குதே கால்கள் !

அடிக்கடி உனை நினைத்தே
துடிக்குதே இதயம் !!!

ஆசையாய் பேச
ஆசைப்படும் என் உதடுகள் !

உன் ஓசை கேட்க
ஓய்வெடுக்கும் என் செவிகள் !

குழந்தையாய் மாறி
குழையும் உன் சிணுங்கல்கள் !!!

தோழியாய் மாறி
கேலியாய் பேசும்
உன் விளையாட்டுக்கள் !!!

மனைவியாய் மாறி
மயக்கத்தில் ஆழ்த்தும்
உன் உணர்வுகள் !!!

தாயாய் மாறி
தாறுமாறாய் தரும்
உன் பாசங்கள் !!!

உன் அழைப்புக்காக
ஆவலுடன் இருக்கும்
என் அலைபேசி !!!

என் தலைமுடி இடைவெளிகள்
தவம் கிடக்கின்றன
தலைவி உந்தன்
விரல் ஸ்பரிசங்களால்
அடைபட !!!

சுற்றும் காற்றினை
சற்று நிறுத்தி
நீயே கேட்டு பார்
உனது பிடித்தம்
அளவு சொல்லிவிட்டு செல்லும் !!!

கண்களை அழகாக்கும் - உன்
மெல்லிய புருவத்திற்கும்
புருஷன் இவன் அடிமைதான் !!!

தோற்றங்களில் மாறுபடும் -- உன்
நிழற்படங்கள்
நிஜமாய் தூண்டுதடி -- நம்
இருநிழலும் சங்கமிக்க !!!

அன்பே உந்தன்
அழகிய கன்னத்தில் -- அந்த
சிறிய மச்சத்தில்
சிதறியது என் மனம் மட்டும் அல்ல !!!
சிரித்தது என் விழிகளும் தான் !!!

சிணுங்கும் சிரிப்பால் -- எனை
சிறைபிடித்த Sri உனை
சிற்பமாய் என்
சிரம் தாழ்த்தி உன்
அகம் மலர காத்திடுவேன்
ஆயுள் முடியும் வரை !!!

எனையே மறந்திட -- உனது
ஏக்கங்கள் நிகழ்ந்திட -- உனக்காக
தூக்கங்கள் துறந்திட --உன்
துக்கங்கள் பகிர்நதிட -- நம்
நினைவுகள் நிஜமாக -- அலாதி
ஆசைகள் அனுபவித்திட -- நீயே
என் உலகம் ஆயிட
நித்தமும் பிரார்த்திக்கும்
உன் அன்பு
செல்வா !!!

பதுமையிடம் பொம்மைகள் !!!

அன்று
பருவ வயதில்
நீ பக்கத்தில்
பாதுகாத்த பொம்மைகள் ,
இன்று
பாதி துக்கத்தில்
மீதி வெட்கத்தில் !!!

அணைப்பிலே அணையுடைத்த
அண்டங்களை அடைகாக்க
திட்டங்களை தீட்டித்தான்
திரட்டினையா
இத்தனை பொம்மைகள் ????

திருமணம் !!!

உறவுகள் புதியதாய்
உயிரிலே கலந்திட,
உயிரையே நமக்களித்த
உறவுகள் கலங்கிட,
உற்சவம் இங்கே
உச்சகட்டம் !!!

Monday, March 8, 2010

மாற்றான் தோட்டத்து மல்லிகை....

சிவந்த ஞாயிறாய்
கடந்த ஞாயிறுகள்
தரும் ஞாபகங்கள் ,
கடந்த ஜென்மத்து பிரதி
பலன்களா ?

கண் மூடினால்
இருள் ஏது உன் முகமே !!
நாசி திறந்தால்
சுவாசம் ஏது உன் வாசமே !!!
செவி சாய்த்தால்
வேறேது செல்லத்தின் குரலே !!!

ஆசை பட்டது இல்லை,
பட்ட ஒன்றும் விட்டு போச்சு
வெந்த புன்னு வீங்கி போச்சு
சொந்த பந்தம் சுருங்கி போச்சு
வந்த பந்தம் வராமலே போச்சு!!!

நிஜத்தை நீ உணரவில்லை
அகத்தை நான் உணரவில்லை
பக்கத்தில் இல்லாத உயிர்
விட்டு பிரியும் தூரம்
வெகுதொலைவில் இல்லை!!

வெள்ளித்திரை வசனம்
வீம்பாய் ஞாபகம் வருது .....

சேர்ந்து வாழ்ந்தாலும்
பிரிந்து அழுதாலும்
அது காதல் தான்..

உனக்கு 81 னா
எனக்கு 80...
அப்பவும் இப்படித்தான்...
இருந்தாலும் இறந்தாலும்

ஆசைகள்...
ஓசையாய்
ஒலித்து ஓயும் ,
ஒழியாய்
ஒழிர்ந்து இருளும் ,
ஓடையாய்
ஓடி வறளும்,
உண்மைதான் அது ,
அனைத்தையும் துறந்து
மறந்தும் மறவாது
மணவாழ்க்கை மாற்றான்
தோட்டத்து மல்லிகையோடு ....

என் ஆசானின் அற்புத வரிகள் !!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே!!
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி !!!

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம் !!
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!!

எது ந்யாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை !!
யார் தொடங்க ? யார் முடிக்க ? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை !!!
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் !!
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணிந்தாய்!!!
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி !!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !!

அற்புத பிறவி !!!

கன்னி உந்தன்
கண்ணீர் துளியாயிட,
ஆசை கொண்டேன்
ஆடவன் நான் !!!
ஆம் !!! உன்
இதயத்தில் கருவுற்று ,
கண்களில் உயிர்பெற்று,
கன்னத்தில் வாழ்ந்திட்டு ,
உதடுகளில் உயிர்நீத்திடும் ,
அந்த அற்புத பிறவியைவிட
வேறென்ன வேண்டும் எனக்கு ????

நேரம் நள்ளிரவு 12...

இருண்ட அறை.,
திறந்த கண்கள்.,

அருகிலே கனவு.,
தொலைவிலே தூக்கம்..,

ஒரு பக்கம் என் தலையனை..,
அதன் எதிர்பக்கம் என் தலை..

அமைதியான இரவில் மன
அமைதியில்லா ஓர் இளைஞன்....

போராட்டம் எதற்கு ???? என்
எழுத்தோட்டம் சொல்லும் ...

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்