Friday, February 18, 2011

அன்புடன் ஆசையாளன் !!!



குளிரும் மார்கழியில் 
ஆவலாய் அள்ளி அணைக்க 
அவளாய் நீ இல்லையே ???

உறக்கத்திலும் உதடு கவ்வி 
உமிழ்நீரால் உனை உணர 
உற்றவளே நீ இல்லையே ???


தினமும் நீ எழும் முன் 
எழுமா என் எண்ணம் ???

இருளிலும் என் இமையிலே 
இயல்பாய் உன்முகம் 
ஓயாமல் ஒளிரும் 
மாயமென்ன மானே ????

கூந்தலின் இடுக்குகளில் 
சுகம் காணும் விரல்களுக்கு 
விரதமா இந்த நாட்கள் ????

கருவிழியின் காட்சிகளில் 
மேகமும் உன் முகம் வரைந்து 
மோகத்தை மூட்டுவது தகுமா ????

நாசாவால் என் நாசிகள் வேற்று 
கிரகத்துக்கு கடத்தபட்டதோ????
வாடை காற்றிலும் உன் 
வாசனை உள்வாங்கும் அவைகளை 
மல்லிகையையும் மயக்கவில்லையே ???

செவி மடல்களோடு சேர்ந்தே இருக்கும் 
வண்ண வண்ண காதணிகள் 
முனுமுனுக்கும் காதல் ரீங்காரம் 
கண்ணே கேட்கவில்லையா????

சாலையின் வளைவுகளில் 
சாய்ந்தே பயணிக்கின்றது 
என் இரு சக்கர வாகனம் ...
பாவம் அது .. சேலையின் வளைவுகள் 
கைகூடவில்லையே ???

ஒரே இடத்திலே ஓயாமல் 
நடக்கின்ற என் கால்களின் 
காரணம் யாரறிவார் ....???
அடியே நீயாவது அறிவாயா ???

உனைசேர ஓடும் இந்த
ஆசையாளனின் விருப்பமே 
பூமியை சுழற்றி  தினமும் உனை தேடுதோ ???


Thursday, February 17, 2011

பூவிதழும் பூவிழியும் ...




இதழின் புன்னகை இரவல் தான் 
நம்மில் பலருக்கு .....
இரவிலே காதல் செய்ய ஏனோ விழி  
அது கண்ணீரை  தேடுகிறது ....

கடல் நீர் இவ்வளவு சேர 
உலகில் எவ்வளவு விழிகள் 
அழுகையோடு சிரித்திருக்க வேண்டும் ....

அழும் மழலையின் மனம் 
அடுத்த நொடியே சிரிக்கும் ...
ஆறடி வளர்ந்த பின்னும் 
அழுகை தான் மீண்டும் உன்னை 
மழலை ஆக்குகிறது ...

மனசின் பாரங்களை 
விழிநீரால் லேசாக்க ..
மனோதோர குப்பைகளை 
கண்ணீரால் காணாமல் செய்ய ....

சாய்ந்தழ ஒரு தோள்...
சேர்ந்தழ இரு விழி ..
தேவை தானே ????????????

விழிநீர் வடிந்தால் 
வீரமற்றவன் அல்ல ....மாற்றாக ...
மீண்டும் பிறப்பவன் ....

உறங்காமல் அழும் கண்களும் 
உரக்க அழும் தனிமையும் 
என்றும் இனிமையானதே .....

Tuesday, February 8, 2011

ஆசை கொள்வாயா அடுத்த பிறவிக்கு ???



இறைவன் கொடுத்த
இனிய வாழ்வில்
கிடைத்த உறவுகள் ,
கிடைக்காத பந்தங்கள்!!!
பதிந்த நினைவுகள் ,
பாதித்த நிகழ்வுகள் !!!
புதைந்த கனவுகள் ,
வதைத்த தவறுகள் !!!
விவாதித்த வினாடிகள்,
விவரித்த விவாதங்கள் !!!
அணைத்த நண்பர்கள் ,
அணைந்த ஆத்மாக்கள் !!!
நிருபித்த நிமிடங்கள் ,
நிராகரித்த தருணங்கள் !!!
அனைத்தையும் அசைபோட்டால்
அற்புதமான வாழ்வில்
அற்பமான ஆசையால்
இழந்தவையும் இனித்தவையும்
இனியாவது புரியும் நமக்கு !!!

Tuesday, February 1, 2011

தெரிந்தே மாறுகிறோமோ நாம் நாமாய் இல்லாமல் ???



அலுவலகம் முடிந்த பின்
ஆசையாய் கணவனின் வரவுக்கு
ஏங்கும் மனைவியின் மனதை
மன்னவன் சொல்லும் "களைப்பாய் இருக்கு"
எனும் வார்த்தை எவ்வளவு கொல்லும்????

நாலு சுவற்றுக்குள்
கண்ட பொருளையே
திரும்பவும் பார்க்கின்ற
அவளின் கண்களுக்கு
யார் சொல்வர்,
மாலையில் மழை உன்
விழிகளில் மட்டும் பெய்கின்றது என்று ????

பணிக்கு செல்வதால் பாசத்தை
இழப்பதாய் ஒரு பக்கம் பெண்கள் !
வீட்டிலே இருப்பதால் வெறிச்சோடி
ஊமையாய் ஆகிறேன் இந்த வாயாடி!!
இப்படி ஒரு பக்கம் !!!

நீயா நானாவில் அற்புதமாய்
சொன்னார் அந்த ஆப்ரிக்க
எழுத்தாழர் ....

வேலை முடித்து
களைப்பாறும் , ஓய்வெடுக்கும்
இடமாகவே பார்க்கின்றோம்
நமது வீட்டை ...

வேலை முடிந்த பின் நண்பர்களோடு
விருந்து என்றால் நமக்கு களைப்பு இல்லை ....
ஆனால் வீட்டுக்கு வந்தால் நமக்கு களைப்பு ...!!!
அது தான் இன்றைய நம்முடைய
கலாச்சாரத்தின் அழிவு என்று !!!

முதுகுக்கு பின்னால் சுமந்து
குழந்தையை தன்னிச்சையாக
வாழவிடுகிறான் ஆப்ரிக்கன் !!!
ஆனால் நமோ ,
மார்போடும் தோளோடும்
அணைத்து , குழந்தை
நம்மை சார்ந்தே வளரசெய்கிறோம் !!!

சிந்திக்க வேண்டிய
வரிகளாய் என் மனதில் பட்டது !!!
அதனால் பகிர்ந்து கொண்டேன் ..

--- முரசொலி
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்