Wednesday, March 10, 2010

இளம் கன்று... பயம் அறியாது ....


அனைவருக்கும் வணக்கம் !!!

சிட்டு போல சிறகடித்து சிறு பிள்ளையாக இருந்த காலம் அது... அந்த பள்ளி வாழ்க்கையை என் நினைவு உள்ளவரை மறக்க முடியாது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் எங்கள் பள்ளி மற்றும் விடுதி ஆண்டு விழா மிகவும் கோலாகோலமாக நடப்பது வழக்கம். நிறைய விளையாட்டு போட்டிகள் , கட்டுரை , கவிதை ,மற்றும் நாடக போட்டி என திறமைகளை அரங்கேற்ற எண்ணற்ற வாய்ப்புகள் தந்த வளாகம் எங்கள் டி பிரிட்டோ விடுதி .

நான் ஒன்பதாவது படித்து கொண்டு இருந்த சமயம் அது ... என்னை அப்பொழுது பிளஸ் ஒன் படித்த அண்ணா ஒருவர் ஒரு நாடகம் எழுதி கொண்டுவா என்று சொல்லி செல்ல, எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை , சுமாராக இருக்கும் எனது கவிதைகளை கண்டு இருக்கிறது அந்த ஹாஸ்டல் அதற்கு முன். தெரியாத ஒன்றை கற்றுக்க வைக்கும் பழக்கம் ஒன்றும் புதியது அல்ல எங்கள் ஹாஸ்டல்-கு.அது தான் அதன் பெருமையே .

ஆதலால் நானும் எழுத ஆரம்பித்தேன் ,ஒரு வழியா எழுதுயும் முடித்தேன் 30 பக்கம் கதையை . பின் அதில் நானும் நடித்து எங்கள் அணி முதல் பரிசு பெற்றது ஒரு தனி கதை , கதைக்குள்ளே கதை வைப்பது இயக்குனர் கௌதம் மேனன் கு பரிட்சயம் என்றாலும் எனக்கு அது கற்றுக்க வேண்டிய விஷயம் . அதனால் அதை நாம் மற்றொரு சந்தர்பத்தில் பேசுவோம். நான் இங்க கூற வந்தது வேறொரு விஷயம், ஆம் அன்று 1998 ல் எழுதிய கதைக்கு அப்புறம்,சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எழுதும் அடுத்த கதை இது..

இந்த மிக பெரிய இடைவெளி எதற்கு ? பத்தாம் வகுப்பு முதல், ஒரு வேளையில் சேர்ந்து ,திருமணமும் ஆனா பின்பு தான் திரும்பவும் அந்த ஒன்பதாவது வரை வாழ்ந்த வாழ்க்கையானது எனக்கு கிடைத்திருக்கிறது . இடையில் அனைவருடைய வாழ்வுமே , வேறொரு பாதையில் தன் நாட்டத்தை செலுத்தி,எதோ ஒரு தேடலை நோக்கியே பயணிக்கும் என்பது ஆணித்தனமான உண்மையென என்னால் சொல்ல முடியும். வளரும் வல்லரசு இந்தயாவின் கல்வி முறை ,வளரும் வாரிசுகளை வாட்டியது,வாட்டுவது நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை .

திருமணம் ஆனா பின்பு , தொலைகாட்சியில் தொல்லை கொடுக்கும் மெகா சீரியல்களை ,கண்ணும் மனதும் காதல் செய்ய ஆரம்பித்து விட்டது என்னால் உணர முடிந்தது , மனதை திசை இருப்ப எடுத்த முயற்சி தான் இந்த சிறுகதை , கிடைத்திருக்கும் இந்த நாழிகைகளை வீணடிக்காமல் ,எழுத துடிக்குது என் இதயம் ,என்னுடைய எழுத்துக்கள் எதோ வரு வகையில் நிச்சயம் உங்களை மகிழவைக்கும் என நம்புகிறேன் . இல்லாவிட்டாலும் உங்களுடைய விமர்சனங்களுக்காக ஏங்கும் என்றுமே என்னுடைய எழுத்துக்கள் .

"இளம் கன்று பயம் அறியாது " - தலைப்பே உணர்த்தும் உங்களுக்கு ,இது நம் சிறுவயதில் நம்மை அறியாமலேயே ,விளைவுகளையே உணராமலேயே ,நாம் அரங்கேற்றிய குறும்புகளை இங்கே நான் குறும் கதையாக அசைபோட ஆசைபடுகிறேன் .நிச்சயம் இது உங்களுடைய நினைவுகளையும் பின்னோக்கி கொண்டு சென்று ,நிமிட சந்தோசத்தை தரும் உங்கள் மனதில். எழுதுகிறேன் ...
காத்திருங்கள் !!! நன்றி !!

2 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்