Wednesday, August 4, 2010

தங்கை !!!


திமிராய் திரிந்த
கட்டிளம் காளையை
கடிவாளமிட கடவுள்
அனுப்பிய உன்னத
உறவு நீ கனி !!!

ஆம்!!! கனிமொழி
என் தங்கையின்
அருமை பெயர்
இது தான் !!!

முழங்கால் தேய
மூக்கு ஒழுக
நாக்கு நவிழ
நடை பயின்ற
அந்த நாள் முதல்
நீ அண்ணா என்று
அழைத்தது யாருக்கும்
கேட்டிடாத சொல் அது !!!

ஆம் !!! மூன்று வயது
பெரியவன் ஆனாலும்
டேய் என்று நீ
அழைக்கும் போது தான்
பாசம் அது
நெஞ்சை முட்டும் !!!

திண்ணையில் நீ
தினம் தினம் தவழையில்
குவளையில் நீர் கொண்டு
குளம் கட்டி நாம் குளித்தது
கதையல்ல நிஜம் !!!!

பனை ஓலையில்
கத்தாளாம் முள் குற்றி
வண்ணத்து பூச்சியிடம்
வண்ணம் சில பூசி
அடிக்கும் காற்றுடன்
ஆர்பாட்டம் செய்த
அழகான நாட்கள் எங்கே !!!
பத்தாவது படிக்கும் போதும்
பரிட்சைக்கு நேரமானால்
பதறி அழும் உன் முகம்
பருவமழை பொய்தபின்
தூறல்களை தாங்கி நிற்கும்
தாமரை இதழ்கள் !!!

பொது தேர்வா அது ???
போனால் போகட்டும் என்றால்
மறுபடியும் முகம் கோணும்
மணமேடை மகள் போல !!!!

மாமனுக்கு மனம் இசைந்து
தாய் பிறந்த வீட்டிலே
நீ தாயாக போகையிலே
பச்சிளம் குழந்தை நீ !!!

சித்தி குழந்தை முதல்
உன் தங்கை குழந்தை வரை
ஒய்யாரமாய் செய்யும்
உனது ஒப்பனைகள்
ஓவியனின் கைகளுக்கே
வெட்ககேடு !!!!

விடுதியிலே விடுபட்ட
தாய் பாசம் அது!!!
ஆறு மாதத்தில்
அழகான கேரளத்தில்
அன்னையவே மறக்கவைத்த
மாற்று தாயம்மா நீ !!!

இருபது வயதிலே
இரு மடங்கு பண்பட்டவள் நீ !!!!
நாற்பது வயதிலே
நாடாள போபவள் நீ !!!
திருமணம் ஆனாலும்
தினம் நீ குழந்தை தான் !!
உன் அகவை ஆறு தான் !!!

கொஞ்சும் மழலை
உன்னில் தஞ்சம் ஆகி
விண்ணை விஞ்சி
உன் வாழ்வு சிறக்க
வாழ்த்தும் அன்பு
அண்ணன்
முரசொலி



Tuesday, August 3, 2010

தாரகையே தாரம் ஆனாய் !!!!

பாதையிலே நீ போகையிலே
பாதியிலே போகுதடி
பாவை உன் பின்னாலே
பாவி உயிர் தன்னாலே ...

ஆவணி திருவிழாவில்
தாவணி நீ அணிந்தாலே
தாவுமடி கண்ணு ரெண்டும்
அழகர் மலை குரங்குபோலே !!!

மதுரை மல்லிகையே
மாமன் கிட்ட சொல்லலேயே..
தங்க தாமரையே நீ
தண்ணி எடுக்க
போகையிலே ...

கோபுர வாசலிலே
போகுற குமரி எல்லாம்
மனதொரமாய் செல்ல
மனதாழமாய் நீ சென்று
மனைவியான மாயமென்ன ..

கள்ளி காட்டுக்குள்
காற்றாட போனவனை
கள்ளி நீ களவாடி
முந்தியிலே முகம்
மறைத்து மூச்சுவாங்க
செய்ததென்ன ????

மஞ்சளிலே நூல்தொடுத்து
நெஞ்சத்திலே தஞ்சமாகி
தஞ்சை கோபுரமாய்
தாரகையே தாரம் ஆனாய் !!!

Sunday, August 1, 2010

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!

தினம் தினம்
திசுவாய் பிணைந்து
சுற்றி திரிந்த
சுகமான பொழுதுகள்!!!

என் கஷ்டங்களை உன்
இஷ்டமாய் இசைந்து
நண்பா நாம் பகிர்ந்த
அன்பு ,ஆசை
இருப்பு ,ஈதல்
உணவு ,உறைவிடம்
உடைகள் ,ஊர்திகள்
ஏக்கங்கள் ,ஏமாற்றங்கள்
அம்பதுகள், ஆயிரங்கள்
ஓராயிரம் யுகங்களுக்கும்
அழியாத காவியமே என்
நினவு ஓலையிலே !!!!

தொலைவிலே நீ இருக்க
அருகிலே அலைபேசியும் இருக்க
இ-மெயிலிலே இரண்டு நிமிட
பேச்சு தான் இன்றைய
விஞ்ஞான ,விசித்திரமான
உலகம் நமக்கு அளித்த
பரிசு !!!!

கலங்கிய பொழுதுகளில்
தெளிந்த நீரோடையாய்!!!
சிரிக்கும் சிறு பொழுதில்
சீர்படுத்தும் சிற்பியாய்,
என் வாழ்வில் வழிகாட்டியாய்
வாழும் என் அன்பு
நண்பர்களுக்கு என் இனிய
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!

தேடல் வாழ்வில்
தேடுவன கிடைத்து
தொடுவானை நீ தொட்டு
நண்பனே,
உன் வளர்ச்சியால்
நம் இந்தியா வல்லரசாக
வழிதொடுப்போம் !!!

நட்புடன்
முரசொலி

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்