தினம் தினம்
திசுவாய் பிணைந்து 
சுற்றி திரிந்த 
சுகமான பொழுதுகள்!!!
என் கஷ்டங்களை உன் 
இஷ்டமாய் இசைந்து 
நண்பா நாம் பகிர்ந்த 
அன்பு ,ஆசை 
இருப்பு ,ஈதல் 
உணவு ,உறைவிடம் 
உடைகள் ,ஊர்திகள் 
ஏக்கங்கள் ,ஏமாற்றங்கள் 
அம்பதுகள், ஆயிரங்கள் 
ஓராயிரம் யுகங்களுக்கும் 
அழியாத காவியமே என் 
நினவு ஓலையிலே !!!!
தொலைவிலே நீ இருக்க 
அருகிலே அலைபேசியும் இருக்க 
இ-மெயிலிலே இரண்டு நிமிட 
பேச்சு தான் இன்றைய 
விஞ்ஞான ,விசித்திரமான 
உலகம் நமக்கு அளித்த 
பரிசு !!!!
கலங்கிய பொழுதுகளில் 
தெளிந்த நீரோடையாய்!!!
சிரிக்கும் சிறு பொழுதில் 
சீர்படுத்தும் சிற்பியாய்,
என் வாழ்வில் வழிகாட்டியாய்
வாழும் என் அன்பு 
நண்பர்களுக்கு என் இனிய 
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!
தேடல் வாழ்வில் 
தேடுவன கிடைத்து 
தொடுவானை நீ தொட்டு 
நண்பனே,
 உன் வளர்ச்சியால் 
நம் இந்தியா வல்லரசாக 
வழிதொடுப்போம் !!!
நட்புடன் 
முரசொலி 
 
 
Superb..! Keep it up..!!
ReplyDeleteThanks Kumaresh ..
ReplyDeleteதடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனும்.. தடம்மாறும் போது தட்டி கேட்பவனும்… உண்மையான நண்பன்.. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..
ReplyDelete