குளிரும் மார்கழியில்
ஆவலாய் அள்ளி அணைக்க
அவளாய் நீ இல்லையே ???
உறக்கத்திலும் உதடு கவ்வி
உமிழ்நீரால் உனை உணர
உற்றவளே நீ இல்லையே ???
தினமும் நீ எழும் முன்
எழுமா என் எண்ணம் ???
இயல்பாய் உன்முகம்
ஓயாமல் ஒளிரும்
மாயமென்ன மானே ????
கூந்தலின் இடுக்குகளில்
சுகம் காணும் விரல்களுக்கு
விரதமா இந்த நாட்கள் ????
கருவிழியின் காட்சிகளில்
மேகமும் உன் முகம் வரைந்து
மோகத்தை மூட்டுவது தகுமா ????
நாசாவால் என் நாசிகள் வேற்று
கிரகத்துக்கு கடத்தபட்டதோ????
வாடை காற்றிலும் உன்
வாசனை உள்வாங்கும் அவைகளை
மல்லிகையையும் மயக்கவில்லையே ???
செவி மடல்களோடு சேர்ந்தே இருக்கும்
வண்ண வண்ண காதணிகள்
முனுமுனுக்கும் காதல் ரீங்காரம்
கண்ணே கேட்கவில்லையா????
சாலையின் வளைவுகளில்
சாய்ந்தே பயணிக்கின்றது
என் இரு சக்கர வாகனம் ...
பாவம் அது .. சேலையின் வளைவுகள்
கைகூடவில்லையே ???
ஒரே இடத்திலே ஓயாமல்
நடக்கின்ற என் கால்களின்
காரணம் யாரறிவார் ....???
அடியே நீயாவது அறிவாயா ???
உனைசேர ஓடும் இந்த
ஆசையாளனின் விருப்பமே
பூமியை சுழற்றி தினமும் உனை தேடுதோ ???
கவிதை மிக அருமை
ReplyDeletethanks a lot J . J ..
ReplyDeleteஒரே இடத்திலே ஓயாமல்
ReplyDeleteநடக்கின்ற என் கால்களின்
காரணம் யாரறிவார் ....???
அடியே நீயாவது அறிவாயா ???---
இது எல்லாம் சரி இல்லை
முதல உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி ஒரு கல்யாணத்தை முடிச்சிட்ட எல்லாம் சரி ஆய்டும்.
நோ குடுங்க வெட்கபடாம கொடுங்க.....
I m sorry Siva .. I m already married and I have cute son too ...
ReplyDelete:)...no problem....
ReplyDeleteheheheeeeeeeeeeee nanbaa super
ReplyDeleteINTHA AASAIYALANIN YEKATHIRK MUDIVU KIDAIKA IRAIVANAI VENDUKIREN
ReplyDeleteAaha...pramaatham...arumai
ReplyDelete