Sunday, March 20, 2011

வாழ்த்துக்கள் பல ...!!!


திருமணம்  இரு மனம்
இணைவது மட்டும் அல்ல ..
சொந்தங்களும், சுகமான
உறவுகளும், அலாதியான அன்பை
 உளமாற பகிர்ந்துகொள்ளும்
 ஒரு உற்சவம் ...!!!

பந்தல் கட்டுவதிலிருந்து
பந்தி பரிமாறுவது வரை
ஒரே குடும்பமாய் ஊரே
குதூகலம் அடையும்
உன்னத திருவிழா !!!

உறவுகளின் உற்சவ திருநாளில்
ஒருவனாய் நானும்
இருக்க அவ்வளவு ஆசை தான் ...
பணியின் நிமித்தம், பங்கேற்க இயலவில்லை ...!!!

நான் பிறந்த அந்த கரிச காட்டில்
நாளை மணநாள் காணும்
ஜெயசெல்வம் -ராஜாத்தி
ராஜபாண்டி - இலக்கியா
இரு ஜோடிகளும்
புரிதலோடு ,புன்னகையோடு
தீராத பாசத்தோடு ,
அழகான பிள்ளைகள் பெற்று
ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன் !!!
நட்புடன்
முரசொலி .....

1 comment:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்