Tuesday, November 4, 2014

உதடோரம் ஒற்றை நரை ...!!!


முதல் மீசை ... அவ்வளவு ஆசை !!!
பரவச மனது... பதினாறு வயசு !!!
ஆணாகி மிரட்ட ... அவசர மனு !!!
மங்கை மயக்க... தங்கை வியக்க !!!

களவாடிய அப்பாவின் பிளேடுகள் ..
கதறிய கண்ணாடியின் நாட்கள் ..
உதறிய ஓராயிரம் கோபங்கள் ..
பூத்த பலநூறு பருக்கள் .. 
பாத்த சிலநூறு பாவைகள் ...
வயது கோளாறு .. வாலிப வரலாறு !!!

கல்லூரி முடிய .. உள்ளூர பயம் ...
உள்ளூரில் இருக்காதே .. உருப்பட மாட்ட ...
புறப்பட்ட கால்கள் ... நிக்காமல் ஓடியது ...
ஒவ்வொரு தெருவும் .. நேர்முக தேர்வாம் !!!
சென்னையோடு ஒரு செல்பி புள்ள !!!

ஒருவேளை சாப்பாடு .. இருவேளை இடைவேளை .. 
மெல்ல மெல்ல எதோ ஒரு வேலை .. 
எல்லாம் சரியாக ... ஆறு வருடம் மினிமம் ஆச்சு ..
பாதி வாழ்க்கை ..கவலையில் போச்சு ..
மீதி வாழ்க்கை .. கனவிலே போச்சு ..!!!

வாய் தொடும் கிர்தா  .. குறுகுறுக்கும் குறுந்தாடி  ...
மேல் மீசை மிணுக்க ... கால்கட்டு போட ...
மாதவனாய் சில நாட்கள் .. மனைவிக்காக ..
சங்கட பட்ட சமயங்களில் ..சசிக்குமாராக ...
மறுபடியும் மீசை எடுக்காதே .. அங்கே அம்மா ...!!!
சேவ் பண்ணுனா என்னடா .... அப்பா அவ்வபோது !!!

பாட்டி இறந்தாலும் ... பங்காளி முறையில் ...
பதினோரு பேரு ... மேவாசை அது  குலவழக்கு ...
தாய்க்கு பத்து என பெத்துபோட்ட நம்மில் ....
பாடை தூக்க ஆள் இல்லையாம் ... 
ரதம் இருக்க ... நாம் எதற்கு .. ????
ஒரு சேய் போதும் .. இன்னொன்னு வேண்டாம் ...
இன்றைய தலைமுறையின் ஏளன பேச்சு !!!!

இடம் வாங்கி ... வீடு கட்ட ...
கடன் வாங்கி ...காடு வித்து  ..
நாம் வாழ்ந்த பூமி பிரிந்து ...
நாலு காசு சம்பாதிக்க ..
மனைவி அவள் சம்மதிக்க ...
பிள்ளை அவன் பிரிந்து அழ ..
நம் நாகரிகம் மறந்து ..
நாகரிகமாய் வாழ்க்கை !!!

முப்பதை தொட்ட நான் ...
முகத்தை உற்று பார்த்தால் ..
முதல் நரை .. மீசையில் மிக தெளிவாய் ...!!!
காலம் பொன் போன்றதாம் .. 
பொண் சேர்க்க வந்த எனக்கு..மறந்தே போச்சு !!!

வீட்டுக்கு அங்கே வெள்ளை அடிக்க ...
தலைக்கு இங்கே கருப்பு அடிக்க ..
காலம் கடந்து .. வாழ்வை வாழ ...
வழக்கமான போராட்டம் !!!

8 comments:

  1. நம் வாழ்க்கையின் இயல்புகளை ரசிக்கும்படியாக இயற்றியமைக்கு பாராட்டுக்கள்......மிகவும் அருமையான படைப்பு...

    ReplyDelete
  2. ஆரம்பமோ தூள், அடுத்தடுத்த வரிகளொ அற்புதம், முடிவோ நிறைவு. ஓர் கவிதையில் பல உணர்ச்சிகள். செம்மாந்த கவிதை.

    ReplyDelete
  3. வயது கோளாறு .. வாலிப வரலாறு!
    காலம் பொன் போன்றதாம் ..
    பொண் சேர்க்க வந்த எனக்கு..மறந்தே போச்சு !!!

    வீட்டுக்கு அங்கே வெள்ளை அடிக்க ...
    தலைக்கு இங்கே கருப்பு அடிக்க ..
    காலம் கடந்து .. வாழ்வை வாழ ...
    வழக்கமான போராட்டம் !!!

    Sema sema na.

    ReplyDelete
  4. ரசிக்கும் படியாக இருந்தது ... சிறப்பு...

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்