இதழின் புன்னகை இரவல் தான்
நம்மில் பலருக்கு .....
இரவிலே காதல் செய்ய ஏனோ விழி
அது கண்ணீரை தேடுகிறது ....
கடல் நீர் இவ்வளவு சேர
உலகில் எவ்வளவு விழிகள்
அழுகையோடு சிரித்திருக்க வேண்டும் ....
அழும் மழலையின் மனம்
அடுத்த நொடியே சிரிக்கும் ...
ஆறடி வளர்ந்த பின்னும்
அழுகை தான் மீண்டும் உன்னை
மழலை ஆக்குகிறது ...
மனசின் பாரங்களை
விழிநீரால் லேசாக்க ..
மனோதோர குப்பைகளை
கண்ணீரால் காணாமல் செய்ய ....
சாய்ந்தழ ஒரு தோள்...
சேர்ந்தழ இரு விழி ..
தேவை தானே ????????????
விழிநீர் வடிந்தால்
வீரமற்றவன் அல்ல ....மாற்றாக ...
மீண்டும் பிறப்பவன் ....
உறங்காமல் அழும் கண்களும்
உரக்க அழும் தனிமையும்
என்றும் இனிமையானதே .....
முதல் வரி முதல்
ReplyDeleteகடைசி வரிகள்
வரை
ஏதோ
ஒரு அழுகை
தென்படுகிறது
ரசிக்கும் கண்ணீரும்
கவிதை தான்
மிக நன்று
Thanks a lot Siva ...
ReplyDeleteசேர்ந்தழ இரு விழி ..
ReplyDeleteதேவை தானே ????????????
விழிநீர் வடிந்தால்
வீரமற்றவன் அல்ல ....மாற்றாக ...
மீண்டும் பிறப்பவன் ....
உறங்காமல் அழும் கண்களும்
உரக்க அழும் தனிமையும்
என்றும் இனிமையானதே .....
super linessssssssss...keep it up nanbaa