Tuesday, February 8, 2011

ஆசை கொள்வாயா அடுத்த பிறவிக்கு ???



இறைவன் கொடுத்த
இனிய வாழ்வில்
கிடைத்த உறவுகள் ,
கிடைக்காத பந்தங்கள்!!!
பதிந்த நினைவுகள் ,
பாதித்த நிகழ்வுகள் !!!
புதைந்த கனவுகள் ,
வதைத்த தவறுகள் !!!
விவாதித்த வினாடிகள்,
விவரித்த விவாதங்கள் !!!
அணைத்த நண்பர்கள் ,
அணைந்த ஆத்மாக்கள் !!!
நிருபித்த நிமிடங்கள் ,
நிராகரித்த தருணங்கள் !!!
அனைத்தையும் அசைபோட்டால்
அற்புதமான வாழ்வில்
அற்பமான ஆசையால்
இழந்தவையும் இனித்தவையும்
இனியாவது புரியும் நமக்கு !!!

4 comments:

  1. அற்புதமான வாழ்வில்
    அற்பமான ஆசையால்
    இழந்தவையும் இனித்தவையும்
    இனியாவது புரியும் நமக்கு !!!

    அழகான கவிதை...சூப்பர் அஹ இருக்கு நண்பா....

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா
    மேலும் தமிழும்
    தங்கள் கவிதையும் சிறக்க வாழ்த்துக்கள்
    அழகான கவிதை ....
    நண்பர்களை நேசிக்கும் நண்பர்களில் நானும் ஒருவனாய்..

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்