மஞ்சளிலே நூல் தொடுக்க ..
குங்குமமும் திலகமிட ..
மணவாளன் துணையாக ...
மணமேடை நிறைவாக ...
சுற்றமும் படை சூழ ...
சுப முகூர்த்த தருணம் அது ...!!!
ஐந்து வருட பந்தம் இது !!!
நெஞ்சத்திலே தஞ்சமாகி ...
பஞ்சணையில் ஒருவராகி ..
இசைந்து இணைந்தாலும் ..
இரு வேறு துருவங்களாய் ...
தொடங்கிய மணவாழ்க்கை அது !!!
உனக்காக நான் மாற ..
எனக்காக நீ மாற ...
நமக்காக "நாம்" மறக்க ...
அழகான தருணங்கள் ..
அன்பான சீண்டல்கள் -- ஆனால்
அளவற்ற எதிர்பார்ப்புகள் ...
சுமையான ஏமாற்றங்கள் !!!
விரைவிலே விரிசல் விழ ...
வார்த்தைகளில் விஷமம் எழ ...
ஏன்டா பிறந்தோம் என ...
வேண்டா வெறுப்பாய் வாழ ...
அனேகம்பேர் கடந்தது தான் - ஆனால்
கடந்து வந்த பாதை...
கரடு முரடு தான் ..
பருவங்களில் தன் இலை துறந்து ..
பச்சையிலை துளிர்வது தானே ...
இயற்கையின் நியதி ...!!!
நாமும் இயல்பின் பிள்ளைகள் தானே !!!
மகனின் மகிழ்வோடு ..
மனதின் துணிவோடு ...
எனது இணையோடு ...
இனிப்பான வாழ்க்கை ...
இறைவனின் ஆசியோடு !!!
ஆசைகள் குறையாது ...
மோகங்கள் தீராது ...
வம்புகள் ஓயாது ..
வரம்புகள் கிடையாது ...
அன்பு நம்மை ஆளும் வரை ...!!!
இந்நாளில் நமை பிரிந்த ...
அன்பு மாமாவின் ஆசியோடு ..
நீயாக நீயும் ... நானாக நானும் ..
நாமாக நாமும் ..
நலமாக .. நால்வராக ..
பெற்றோரை அரவணைத்து ...
பேரின்ப குடும்பமாக ...
ஞாலம் வியக்க ...
நாளும் சிறக்க வாழ்வோம் .. !!!
திருமண நாள் வாழ்த்துக்கள்...
அன்பு மனைவிக்கு ..
அளவில்லா முத்தங்களோடு !!!
அன்புடன் ஆசையாளன் ..
முரசொலி க
No comments:
Post a Comment