Tuesday, August 3, 2010

தாரகையே தாரம் ஆனாய் !!!!

பாதையிலே நீ போகையிலே
பாதியிலே போகுதடி
பாவை உன் பின்னாலே
பாவி உயிர் தன்னாலே ...

ஆவணி திருவிழாவில்
தாவணி நீ அணிந்தாலே
தாவுமடி கண்ணு ரெண்டும்
அழகர் மலை குரங்குபோலே !!!

மதுரை மல்லிகையே
மாமன் கிட்ட சொல்லலேயே..
தங்க தாமரையே நீ
தண்ணி எடுக்க
போகையிலே ...

கோபுர வாசலிலே
போகுற குமரி எல்லாம்
மனதொரமாய் செல்ல
மனதாழமாய் நீ சென்று
மனைவியான மாயமென்ன ..

கள்ளி காட்டுக்குள்
காற்றாட போனவனை
கள்ளி நீ களவாடி
முந்தியிலே முகம்
மறைத்து மூச்சுவாங்க
செய்ததென்ன ????

மஞ்சளிலே நூல்தொடுத்து
நெஞ்சத்திலே தஞ்சமாகி
தஞ்சை கோபுரமாய்
தாரகையே தாரம் ஆனாய் !!!

2 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்