கருவாய் கனிந்த காலத்திலே
கால்களால் உதைத்தபோதும்
அன்னையை கட்டியணைத்து
அழகாக துள்ளுவதாய்
ஆனந்தப்பட்ட அப்பா உனை
அன்றே பார்க்க ஆசை தான் !!!
மகனை பெற்றெடுக்க
அன்னை அவள் அழுதுபுரள
கைகளை பிசைந்தபடி
குறுக்கும் நெடுக்குமாய்
குறைந்தது பத்து மைல்
தூரத்தை கடந்த உனை
கண்களில் கண்டபோது
கண்ணுக்குள் கருவிழியாய்
கால் தடுமாறும் வயதிலும்
காத்திட ஆசை தான் !!!!
தவழும் வயதில்
பூமியிலே பூக்கள் விரித்து
தரையிடம் பகை தீர்த்த
பாசக்கார அப்பா நீ !!!!
நடை பயின்ற போது
கூச்சலிடும் ஷூவை விட
உனது கைதட்டல் உரக்க
கேட்குமப்பா ,ஊரையே கூட்டுமப்பா!!!
பள்ளியிலே விட்டுவிட்டு
பாதியிலே திரும்பிவந்து
படபடக்கும் உனை
உன் அன்னை பார்த்தால்
பாவிப்பாள் அரை வயது
குழந்தையாய் உனை !!!
அடி அடியாய் நான் வளர
அணு அணுவாய் ரசித்து,
தோள் தொட்ட போதும்
தோழனாய் பாவித்த உனை,
தகப்பனாய் பிரமன் அவன்
தாரைவார்க்க என்ன நான்
தவம் செய்தேனோ ???
உன்னிடம் கற்றது
ஒன்றா இரண்டா ???
உயிருள்ளவரை உணர்வுகளை
கட்டுபடுத்த !!! உறவுகளை
அரவணைக்க !!! தவறுகளை
திருத்திக்கொள்ள !!! ஆசைகளை
நிறைவேற்ற !!! நெஞ்சங்களை
நேசிக்க !!! அடுக்குவேன்
அளவில்லாமல் !!!!
மற்றோர் பிறவியில்
எனது பிள்ளையாய்
நீ இருக்க, ஊணுயிறாய்
உனை காக்க இறைவனை
பிரார்த்திக்கும்
உன் அன்பு ...
செல்வம்
super.
ReplyDeletecan you enable access to your profile, thanks for all ur comments
ReplyDelete