அகலாத அவள் நினைவுகள்
என் ஆயுள் முடிவுக்கு பின்
எங்கே போகும் ???
புரியும் முன்னே என்னுள்
புதைந்த பூவசமே ,
சுவாசம் முழுதும் உந்தன்
உணர்வே ...!!!
விழிகளுக்கு விடை சொல்லி
நீ செல்லும் ஒவ்வொரு நிமித்தமும் ,
விடைதெரியா விழிநீருக்கு
அணை கட்ட கரிகாலன் இல்லையே ????
நினைவில் நீ மட்டுமே,
நித்தமும் நிறைவவள் !
கனவில் நீ மட்டுமே,
காரணமின்றி கலப்பவள் !!
உணர்வில் நீ மட்டுமே,
உரிமையோடு உறைந்தவள் !!!
உலகில் நீ மட்டுமே ,
எனக்காக பிறந்தவள் !!!
நீ மட்டும் போதும் நிஜமாய்
வாழ்வதற்கு .. !!
வாழ்ந்த காலம் போதும்
இறந்தாலும் வாழ்வதற்கு ..!!
அன்புடன் ஆசையாளன் ...