Sunday, April 21, 2013


கொரியா தமிழ் நண்பர்கள் தமிழ் புத்தாண்டு விழா 2013 !!!


அழகான இதையத்தொடு 

அன்பான புன்னகையோடு 

என் இனமான , தமிழ் தங்கங்களை ,

வள்ளுவனின்  வாரிசுகளை ,

பாரதியின் பங்காளிகளை ,

கோலமிட்டு , வாழை மரமும் நட்டு ,

நெற்றி பொட்டுமிட்டு ,

தாழ் தொட்டு வணங்கி , தமிழர் திருநாளின் 

புத்தாண்டு  வாழ்த்துக்களோடு ,

என் சிறிய சமர்ப்பணம் , என் உறவுகளுக்கு !!!


விளக்கேற்றி ஒளிவூட்டி ,

நமக்கேற்ற  உடை உடுத்தி ,

நம் சொந்தங்களோடு உணவு உண்டு ,

சுமை மறக்க , உற்சாக உற்சவம் 

இங்கே ஆரம்பம் !!!


இரவும் பகலும் உறவுகளோடு 

வாயாடியே , வாதாடியே ,

வாழ்ந்த கூட்டம் நாமெல்லாம் !!!


குளிரும் பனியும் குதுகூலமிடும் 

கொரியா தேசத்தில் , 

கண்ணாடிகள் சூழ்ந்த கட்டிடத்தில் 

காற்றோடு மட்டுமே இங்கே 

கதை பேச முடியும் நம் மங்கைகளுக்கு !!


வாய் வலிக்கும் வரை ,

வாங்க நாம்  பேசலாம் , 

பலகாலம் பழகலாம் !!!

மனதின் பாரத்தை பரிமாற ,

சாய்ந்து அழ பல தோள்கலாய் ,

சேர்ந்து சிரிக்க பல விழிகளாய் ,

பாரத மாதாவின் பாசப் பறவைகளாய் ,

தமிழன்னையின் விழுதுகளாய் ,

வாருங்கள் வாழ்ந்து பார்க்க ,

இந்த நாள் நமக்கே நமக்கு என்று !!!


தாண்டிய கடல்களுக்கு தெரியும் ,

மோதிய அலைகளுக்கும் புரியும் ,

பிறப்பால் உணராத பிரிவின் வலியும் ,

சொந்தங்களை காணாமல் 

கசிந்த கண்ணீரின் அளவும் !!!



நாம் பிறந்து, அன்னைக்கு அர்த்தம் அளித்தோம் !

மழலை பேசி ஆயுள் கூட்டினோம் நம் பாட்டிகளுக்கு !!

தாய் மண்ணில் தவழ்ந்து , புழுதி படர புரண்டு ,

கிட்டி பிள்ளையும் , கோலி குண்டும் ,

பம்பரமும் , பந்தும் ஆடி 

ஆர்பரித்த  நாட்கள், நமக்கு வசந்த காலம் !

ஆனால் , நம் மழலைகளுக்கு அது ஒரு வரலாறு !!!


மரம் சூழ்ந்த மகா தேசத்தில் ,

மறுபடி மறுபடி நம் முக தரிசனம் 

மட்டும் கிடைத்த 

நம் குட்டி செல்வங்களுக்கு ,

குதுகூலம் இங்கே இந்த நன்நாளில் அரங்கேற்றம் !!!


நம்மில் பலரின் மனைவியும் ,குழந்தையும் இந்தியாவில் !

 நாமோ இங்கே தன்னந்தனியாய் !

எவ்வளவு வலி அது ! 

ஒரே வாரத்தில் உணர்ந்து விட்டேன் !

இங்கே உரக்க சொல்கிறேன் அதை !!!


மகனே ,உன்னை விஞ்சி ஏது என் சந்தோசம் !

மங்கையே , நீ இல்லாது ஏது  என் வாழ்வு !!


மழலை சொற்களை ,

மகனே நீ உச்சரிப்பதால் கிடைக்கும் ,

மங்காத சந்தோசம் வேண்டும் !

தொலைபேசியில் உன் குரல் கேட்கும் 

தொழில்நுட்பம் வேண்டாம் !!


மாலை உன் முகம் பார்க்கும் பாரதம் வேண்டும் !

தேடும் போதெல்லாம் வீடியோவில் வியக்கும் 

விஞ்ஞானம் வேண்டாம் !!


ஆனந்தமாய் ஆடிப்பாடி உன்னுடன் 

விளையாடும் அந்த நொடிகள் தான் வேண்டும் !

ஆறடி பாதையில் அமைதியான 

வாக்கிங் வேண்டாம் !!


நீ சிதறிய படியே சிரித்து உண்ணும் 

உணவுதான் வேண்டும் !

இருத்த முகத்தோடு , இலை  தலையை உண்ணும் 

வாழ்க்கை வேண்டாம் !!


அம்பது டாலர் அவசியம் இல்லை !

நமது டூ வீலர் அவசியம் வேண்டும் !!

ஆட்டோக்களை துரத்தி ,

உன் ஆசை தீர்க்க !!!


எத்தனை பொருட்களை , இறக்குமதி செய்தாலும் 

இந்த பிரிவு இணை செய்ய முடியாது !!!


தேரோடும் மதுரை வீதியில் ,

சித்திரை வெய்யிலும் ,குளிரும் நமக்கு !

குளிரும் சுடுகிறது ,மனைவியே உன் பிரிவால் !!!


என் அன்பு சொந்தங்களை ,

அரங்கம் நிரம்பி , ஊரே ததும்பும் 

திருவிழா போல் , கண்கள் காணுகையில் ,

ஓரமாய் நீர்த்துளி !!!


அழகான பாவனைகளில் ,

நிறைந்த  அழகோடு , நம் தாவணி பெண்களின் 

அழகான நடனங்கள், 

அத்தனை பரிவர்த்தனைகள்  ,

வியத்தகு விழாகோலங்கள்  !!!


வந்தோரை வரவேற்று ,

உளமார உரையாடி ,வயிறார உணவுமிட்டு ,

திக்கு முக்காட வைக்கும்,

 தமிழனின் பண்பாடும் கலாச்சாரமும் ,

கடல் கடந்தும் காக்கப்படுவதை, 

இமை வியக்க எடுத்துரைக்கும் 

நம் விழா  குழுவிற்கு , நன்றிகள் போதாது !!!


மா இலையும் , கூலப்பூவும் ,

முகப்பில் முத்தமிடும் அழகிய திருநாள் இது !

குங்குமமும் சந்தனமும் , நம் நெற்றியிலே   

தொற்றிக்கொள்ளும் வெற்றி விழா இது !!

ஏர்  பூட்டி உழுது , பசி போக்க பாடுபடும் 

தமிழனின் பழம் பெரும் விழா இது !!!

தமிழ் புத்தாண்டு அது !!!


முப்பாட்டன் வம்பாடு பட்டு 

ஆளான அழகர்கள் நாம் ! - பிறர் 

அகம் உணரும் அரும்புகள் நாம் !!

புறம் பேசா வீரத்தமிழர்கள் நாம் !!!

வாழ்ந்து காட்டுவோம்

 வளமான தமிழர்களாய் !

வளைகுடா பல கடந்தாலும் 

பறைசாற்றுவோம் அன்னைத்தமிழை !!!
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்