Tuesday, March 9, 2010

தோழியின் தோல்வி கவிதை !!!


இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்

உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்

இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்

எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்

சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்

அதை சொல்லிச் சொல்லியே
என் கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய !
எனக்கு மட்டும் உரிமை உண்டு உன்னை காக்க !!
மலரிடம் சொன்னது முள் !!!

விட்டு விலகும் நெஞ்சங்கள் எல்லாம் விடுதலை விரும்பிகள் என்றால்
விருப்பத்தை மறைத்துத்தான் விதைத்திருக்கலாமே!!!

கண்ணீரில் நீந்த வைத்த
கன்னி உன் கவிதைகளை
கண்டால்
பிரம்மனும் பிரம்மிப்பான் !!!
உன் காதல் கை கூட
புதுபிறவி ஒன்றை
அருள்விப்பான் !!!!
வாழ்த்துக்கள் தோழி !!!

1 comment:

  1. கண்ணீரில் நீந்த வைத்த
    கன்னி உன் கவிதைகளை
    கண்டால்
    பிரம்மனும் பிரம்மிப்பான் !!!
    உன் காதல் கை கூட
    புதுபிறவி ஒன்றை
    அருள்விப்பான் !!!!
    வாழ்த்துக்கள் தோழி !!!
    nandri nanba

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்